செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஒரு மாநிலத்தில சீஃப் எக்ஸிக்யூட்டிவ்…  தலைமை நிர்வாகினா… தமிழ்நாட்டுல திராவிட ஸ்டாக்கா ? அந்த ஸ்டாக்லாம் பரப்புற பொய்யால் அதிகாரம் படைத்தவர் முதல்வர் என்கிறார்கள் நோ! அரசியலமைப்பு சட்டம்படி மாநிலத்தில் முதல் அதிகாரம் கவர்னருக்கு தான் உண்டு. முதலமைச்சரோட  பரிந்துரையையேற்று  அமைச்சர்களை நியமிக்கலாம்.

1979-இல்  கருணாநிதி VS யூனியன் ஆப் இந்தியா &  OTHERS. அந்த ஜட்ஜ்மெண்ட்ல…  Y.V சந்திரசூட் அவர்கள் தலைமையில ஐந்து பேர்  அரசியலமைப்பு பெஞ்சோட தீர்ப்பு இருக்குது.  அந்த தீர்ப்பினுடைய  55- ஆவது பாயிண்ட்டை  நான் சொல்றேன்…  நீங்க நெட்ல வெரிஃபை பண்ணிக்கலாம்.

கலோக்கியல் மந்திரி பொன்முடியா ? …. அந்த முடிய கலோக்கியலா எழுதிக்கோங்க நீங்க… நான் சொல்லல… கே.என். நேரு, இவங்க எல்லாரும் மேலேயும் ED கேஸ் இருக்கு.. அதனால ஒரு ஒருத்தரா அனுப்புறதா? இல்ல நான் மொத்தமா அனுப்புறதான்னு யோசிக்கலாம். அதனால இப்போ ஏன் ஹோல்டுல போட்டு இருக்கேன்னு கேக்குறாங்க.

ஒரு அமைச்சர்களை  ஒட்டுமொத்தமா அனுப்புற வசதி…. நேரம் வாய்க்கும்னா மொத்தமா அனுப்பிச்சறலாமே… எனக்கு என்னவோ,  பார்லிமென்ட் தேர்தலோட தமிழ்நாடு தேர்தலும் வரும்னு என்னோட சொந்த அபிப்பிராயம் என தெரிவித்தார்.