2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கட்டிடக்கலை பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தேசிய அளவில் கேட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்து அறிவிப்பை இந்திய அறிவியல் கழகம் தற்போது gate2024.iisc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.