ஒவ்வொரு வருடமும் சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பாசத்தை சிறப்பிக்கும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் இந்த பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு வட மாநில அரசுகள் பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் உத்திரபிரதேச மாநில முதல்வர் ஆகஸ்ட் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவு வரை மாநிலத்தின் மொத்தம் 14 மாவட்டங்களில் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். நாட்டில் பெண்களின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 1250 ரூபாய் மாதம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.