நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போகும். வரும் 2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். அதிமுக கட்சி யாரை நம்பியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.