ஒவ்வொரு மாதமும் அனைத்து பகுதிகளிலும் மின்நிறுத்தம் மேற்கொள்ளப்படும். அப்பகுதியில் நடைபெறும் பரமாரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்சாரத் துறை வாயிலாக அறிவிக்கப்படும். மின் நிறுத்தம் குறித்து உள்ளூர் பேப்பர்களில் வெளியிடப்படும். தற்போது மின்நிறுத்தம் குறித்து வீட்டில் இருந்தபடி முன்கூட்டியே ஆன்லைன் வழியாகவே தெரிந்துக்கொள்ளலாம்.

 மின்நிறுத்தத்தை ஆன்லைல் வாயிலாக தெரிந்துக்கொள்வது எப்படி?

மின்சாரத் துறையின் https://www.tangedco.gov.in/ என்ற இணைதள பக்கத்துக்கு சென்று Consumer Info என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதையடுத்து Scheduled outage information எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் உங்கள் மாவட்டத்தின் பெயரை குறிப்பிட வேண்டும். அதில் அம்மாவட்டத்தில் குறிப்பிட்ட நாளில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்களின் பெயர்கள் இருக்கும். இன்றைய மின்நிறுத்த பகுதிகள் மட்டும் இருக்கும் என்பதால் தினசரி காலை நேரத்தில் இந்த வழிமுறையை பின்பற்றி மின்நிறுத்தம் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.