அக்டோபர் 8 ஆம் தேதி (இன்று) முதல் இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான 14,000 டிக்கெட்டுகளை பிசிசிஐ வெளியிட உள்ளது..

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) 132,000 பேர் அமரக்கூடிய வகையில் இந்த ஆட்டம் (இந்தியா -பாகிஸ்தான் போட்டி) நடைபெற உள்ளது. இந்நிலையில் “அக்டோபர் 14, அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான 14,000 டிக்கெட்டுகளை இன்று வெளியிடுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனை அக்டோபர் 8, அதாவது இன்று மதியம் 12 மணி முதல் இந்திய நேரப்படி தொடங்கும். அதிகாரப்பூர்வ டிக்கெட் இணையதளத்தின் https://tickets.cricketworldcup.com மூலம் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம்.”

இந்த மைதானத்தில் சமீபத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து இடையே உலகக் கோப்பை தொடக்க ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் சதங்களின் உதவியால் அந்த ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து. நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பை போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உலகக் கோப்பையில் இந்தியா 8வது முறையாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன் 7 முறை ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இதில் அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் வெற்றி :

1992 : இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1996 : இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1999 : இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2003 : இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2011 : இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2015 : இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2019 : இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (டிஎல்எஸ் முறை மூலம்).

இதனால், 1992 சாம்பியன்களான பாகிஸ்தான் அணி 50 ஓவர் ஐசிசி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். இரு அணிகளும் கடைசியாக 2019 உலக கோப்பையின் போது ஒற்றையொன்று சந்தித்தது, அப்போது பர்மிங்காமில் DLS முறையின் மூலம் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. எனவே இந்த வரலாற்றை அப்படியே வைத்திருக்க இந்தியா நினைக்கும். அதேசமயம் இந்த வரலாற்றை மாற்றி முதல் வெற்றியை இந்திய மண்ணில் ருசிக்க பாகிஸ்தான் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும். இதற்கிடையே இன்று சென்னை சேப்பாக் சிதம்பரம் மைதானத்தில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது..