
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சாஃப்ட்வேர் பொறியாளரான ஜோதிஷ் குமார் யாதவ். பெங்களூரில் பணிபுரிந்து வந்த இவர் தீபாவளி விடுமுறைக்காக திருப்பதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் நேற்று உலகக்கோப்பை இறுதிப் போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டத்தின் முடிவில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றத்தை பார்த்த குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. இதயைடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.