தற்பொழுது 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. மிசோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு சில மாநிலங்களில் முதல் கட்ட முழுமையான வாக்குப்பதிவு,  அடுத்தகட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில்,  5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன.

அந்த நாளில் இருந்து தற்போதுவரை ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.  பொருட்கள்,  மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள், இலவசமாக கொடுத்த பொருட்கள் என பல்வேறு கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவரத்தை தற்போது தேர்தல் ஆணையம் ஒரு தகவலாகவே வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் பார்க்கும்போது ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ஐந்து மாநிலங்களும் சேர்த்து மொத்தம் 1760 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இதே மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மொத்தமாக 239.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,  தற்போது அதைவிட ஏழு மடங்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தவரைக்கும் மாநிலங்கள் வாரியாக எந்த அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ரொக்கமாக மொத்தம் 372.9 கோடி….. மதுபானங்களாக 214.8 கோடி……போதை பொருட்களாக 245 .3 கோடி….  வாக்காளர்களுக்கு வழங்க பொருட்கள் உள்ளிட்டவை வழியாக 371.2 கோடி…… இதர பொருட்களாக 556 கோடி என  மொத்தம் 1760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தெலுங்கானாவில் 659. 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் மதுபானம் உள்ளிட்ட இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 650.7 கோடி ரூபாய்….  மத்திய பிரதேசத்தில்  323.7 ரூபாய்யும்…. மிசோரம் குறைந்தபட்சமாக 49. 6 கோடி ரூபாய் காண பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய பட்டு இருக்கிறது கோடி 13 செய்யப்பட்டுள்ளது.