ஆதார் கார்டை போல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலுமே பான் கார்டு இணைப்பது மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த பான் கார்டை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடியும். ஆன்லைன் மூலமாக எப்படி எடுப்பது என்பது குறித்து பார்க்கலாம் .முதலில் NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களுடைய பான் கார்டு எண், ஆதார் எண், பிறந்த தேதியின் மற்றும் கேப்ட்சா குறியீடு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய பான் விவரங்களை சரிபார்த்து ஓடிபி என்பதை கிளிக் செய்யவும். பிறகு பதிவு செய்யப்பட்ட செல்போனிற்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதனையடுத்து விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய பான் கார்டு நகல் உங்களுடைய வீட்டு முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.