இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்   2022-2023 நிதியாண்டில் SBI மொத்த நிகர லாபமாக ரூ.50,232.45 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஜன-மார்ச் காலாண்டில் ரூ.31,197 கோடியாக இருந்த வட்டி வாயிலான வருமானம் 2023 ஜன-மார்ச் காலாண்டில் ரூ.40,392.50 கோடியாக (29.5%) உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் ரூ.8427.8 கோடி மதிப்பிலான வாரக்கடன் குறைந்துள்ளது. அதேபோல பங்குகள் மீதான முதலீட்டுக்கு 19.43 % வருமானம் பெற்றுள்ளது.