இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மதியம் 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் ஏற்படும் வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார், ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் எல்லுண்டி ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிகவும் வெப்பமான காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், மே 20 முதல் 22 வரை உ.பி., ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.