மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சி தலைவர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் குறிவைத்து விமர்சித்தார். இந்த கருத்துக்கள் குறித்து பத்திரிகையாளர்கள், நாம தமிழர் கட்சித் தலைவர் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கடுமையான பதில் அளித்தார்.
சீமான், “2011-ல் விஜயகாந்திற்காக நான் வாக்கு சேகரித்தவன். அப்போது அவருக்கு ஆதரவாக விஜய் வரவில்லை. இன்று சினிமா புகழை வைத்து அரசியலில் வெற்றி பெற முயற்சி செய்வது எளிதான விஷயம் அல்ல. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் உள்ள ஒரு சித்தாந்தத்தை, வெறும் சினிமாவை மட்டும் வைத்து வீழ்த்திவிட முடியும் என்று சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது” எனக் கூறினார்.
மேலும் அவர், “அண்ணா வழியில் சென்று திமுகவை வீழ்த்துவேன் என்று கூறுவது ஒரு அரசியல் பொய்யான வாக்குறுதியாக மட்டுமே இருக்கும். மக்கள் இன்று முகத்திற்காக வாக்களிக்கலாம், ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அதே முகம் இருக்கும் என யாரும் உறுதி சொல்ல முடியாது. விஜய் முகத்திற்காக வாக்கு செலுத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
