சவுரவ் பாண்டே என்ற மோட்டார் சைக்கிள் பயணி, தனது தென்னிந்திய பயணத்தின் போது மகாராஷ்டிராவின் வேருல் கிராமத்தில் தனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் அங்கு தங்கியிருந்த அவருக்கு, மொழி தெரியாத நிலையிலும் அந்த கிராம மக்கள் காட்டிய அன்பு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
<a href="http://
“>
அவருக்குப் பிடித்தமான மிளகு டீ மற்றும் பிரத்யேக உணவுகளைத் தயாரிப்பதற்காக,உள்ளூர் மக்கள் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து உபசரித்துள்ளனர்.
“இதயம் பேசும் மொழிக்கு வார்த்தைகள் தேவையில்லை, இது அரசியலை விட மேலானது” என்று சவுரவ் உருக்கமாகக் கூறியுள்ளார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைப்படி மக்களை ஒன்றிணைப்பதே மகாராஷ்டிராவின் பண்பாடு என சவுரவ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைக் கண்ட பலரும், மகாராஷ்டிராவில் விருந்தினர்களைக் கடவுளாகக் கருதும் பழக்கம் இன்றும் மாறாமல் இருப்பதைப் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
மொழி மற்றும் இனப் போராட்டங்களுக்கு மத்தியில், மனிதநேயமும் மற்றவர்கள் மீதான அக்கறையுமே உலகத்தை அழகாக்குகிறது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
