சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மகேஸ்வரி என்பவர் பகிர்ந்த ‘ஸ்ட்ராபெர்ரி பச்சடி’ வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பொதுவாக மாம்பழம் அல்லது அன்னாசிப்பழம் கொண்டு செய்யப்படும் தென்னிந்திய பச்சடி முறையில், இவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சேர்த்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
<a href="http://
“>
பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போன்ற பாரம்பரிய மசாலாப் பொருட்களுடன் ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து சமைக்கப்படும் இந்த வீடியோ, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விசித்திரமான செய்முறையை சைதன்ய கரிகாபர்தி என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் “மாம்பழம் மற்றும் அன்னாசியில் பச்சடி செய்யும்போது ஸ்ட்ராபெர்ரியில் செய்வதில் என்ன தவறு?” எனப் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் சிலரோ, காரமான தென்னிந்திய மசாலாக்களுடன் ஸ்ட்ராபெர்ரியின் இனிப்புச் சுவை பொருந்துமா எனச் சந்தேகம் எழுப்புகின்றனர்.
எது எப்படியோ, இந்த நவீன கால சமையல் பரிசோதனை சமூக வலைதளங்களில் ஒரு ‘பியூஷன்’ உணவாக வைரலாகி வருகிறது.
