தன் குடும்பத்தின் நூறாண்டு கால பாரம்பரிய தொழிலை விட, தான் நேசித்த பெண்ணே முக்கியம் என முடிவெடுத்து வாழ்க்கையில் வெற்றி கண்டவர் ஆஷிஷ் மல்பாணி.
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ‘மல்பாணி குழுமத்தின்’ வாரிசான இவர், தனது சாதி மறுப்புத் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, சொத்து மற்றும் அதிகாரத்தை உதறிவிட்டு வெளியேறினார்.
<a href="http://
“>
2002-ஆம் ஆண்டு பூஜ்ஜியத்திலிருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆஷிஷ், ஒரு சிறிய பிஸ்கட் நிறுவனத்தை நடத்தி, பின்னர் ரியல் எஸ்டேட்துறையில் தடம் பதித்தார். எவ்வித குடும்ப ஆதரவும் இன்றி கடின உழைப்பால் தனது சொந்த அடையாளத்தை உருவாக்கினார்.
ஆஷிஷின் அசாத்திய வளர்ச்சியைக் கண்ட அவரது சகோதரர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரைத் தேடி வந்து குடும்பத்துடன் இணைத்துக் கொண்டனர். இன்று அவர் உருவாக்கிய ரியல் எஸ்டேட் பிரிவுதான் அந்த குழுமத்தின் மிக லாபகரமான வணிகமாகத் திகழ்கிறது.
ஒரு வாரிசாக அல்லாமல், ஒரு சிறந்த தொழில்முனைவோராகத் தன்னை நிரூபித்த ஆஷிஷ், “காதலுக்காக நான் எடுத்த முடிவு சரியானது” என்றுதுறையில் தடம் பதித்தார். எவ்வித குடும்ப ஆதரவும் இன்றி கடின உழைப்பால் தனது சொந்த அடையாளத்தை உருவாக்கினார்.
ஆஷிஷின் அசாத்திய வளர்ச்சியைக் கண்ட அவரது சகோதரர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரைத் தேடி வந்து குடும்பத்துடன் இணைத்துக் கொண்டனர். இன்று அவர் உருவாக்கிய ரியல் எஸ்டேட் பிரிவுதான் அந்த குழுமத்தின் மிக லாபகரமான வணிகமாகத் திகழ்கிறது.
ஒரு வாரிசாக அல்லாமல், ஒரு சிறந்த தொழில்முனைவோராகத் தன்னை நிரூபித்த ஆஷிஷ், “காதலுக்காக நான் எடுத்த முடிவு சரியானது” என்றுபெருமிதத்துடன் கூறுகிறார்.
வசதியான வாழ்க்கையை விட சொந்த உழைப்பும், அன்பும் ஒருவரை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாகும்.