மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி மக்களுக்கு ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வை தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய்க்கு உயர்த்தி அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 42 ரூபாயிலிருந்து 46 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது.