தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது நிலத்தை அளவையர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி தாசிலியாரிடம் முறையாக மனு கொடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவையர் ஜோதி உள்ளிட்டோர் நிலத்தை அளவீடு செய்தனர்.

இதனை பார்த்ததும் முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகியோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முனியம்மாளும் அவரது மகளும் இணைந்து கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை அதிகாரிகள் மற்றும் சாலம்மாள் மீது ஊற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முனியம்மாள், மாதம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.