மகாத்மா காந்தி கடந்த 1931 ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக மகாத்மா காந்தி போஸ் கொடுத்துள்ளார். இந்த ஓவியம் கடந்த 1974 ஆம் ஆண்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்சில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தியின் இந்த ஓவியம் ரூபாய் 1.7 கோடிக்கு விற்பனையானது. இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.