ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்கள் மீதான அடக்குமுறைகள் என்பது அதிகரித்து வருகிறது. பெண்கள் பொதுவெளியில் முகத்தை காட்டக்கூடாது பேசக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான கெடுபிடிகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் திருமணத்தை அவர்கள் அங்கீகரித்துள்ளது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த நாட்டில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அவர் சிறுமியை திருமணம் செய்வதற்காக குழந்தையின் தந்தைக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறுமியை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தலிபான் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் சிறுமிக்கு தற்போது ஆறு வயதுதான் ஆகிறது எனவே வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். 9 வயது ஆகும்போது திருமணம் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் சிறுமி தற்போது தன் பெற்றோருடன் இருக்கும் நிலையில் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில் 9 வயதில் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என தலிபான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அங்கு குழந்தை திருமணம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
