அமெரிக்காவின் டென்னஸ்சீ மாகாணம், ஜான்சன் சிட்டி பகுதியில் உள்ள ஈஸ்ட்மேன் கிரெடிட் யூனியன் வங்கி கிளையில் ஒரு தம்பதி ஆபாசமாக நடந்து கொண்டு டிக்டாக் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுப்பாக வந்த தம்பதி, அந்த வங்கிக்குள் நுழைந்து டிக்டாக் வீடியோவுக்காக சில காட்சிகளை பதிவு செய்தனர். இதற்காக அவர்கள், வங்கியின் கண்ணாடி ஜன்னல் பகுதியில், குளிரால் உறைந்துபோல் தோன்றும் இடத்தில் ஆபாசத் தோற்றமளிக்கும் வகையில் ஆபாசமாக  நடித்து வீடியோ எடுத்துள்ளனர். அப்போது வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் அதனை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அந்த வீடியோ டிக்டாக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியாகி விரைவாக வைரலாகியது. பொதுவிடத்தில் இந்த மாதிரியான தகாத நடத்தை மிகவும் மோசமானது  என சமூக ஊடக பயனாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்த வங்கி கிளை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஆபாசக் காட்சி தெளிவாக தெரியாமல் இருந்தாலும், செயல் தவறானது என்பதில் அனைவரும் ஒருமித்த மனதுடன் விமர்சனம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தம்பதியர் வங்கி ஊழியர்களா, அல்லது வெளி நபர்களா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.