அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள கெட்டிஸ்பர்க் நகரில், உலகப்புகழ்பெற்ற அமானுஷ்ய புலனாய்வாளர் டான் ரிவேரா (வயது 54) கடந்த வார தொடக்கத்தில், தங்கியிருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன், ‘டெவில்ஸ் ஆன் தி ரன்’ எனப்படும் பேய் சுற்றுப்பயணத்தைக் கொண்டு, சோல்ஜர்ஸ் தேசிய அனாதை இல்லத்தில் ரிவேரா வழிநடத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த சுற்றுலாவில், உலகத்துக்குப் பயத்தை உருவாக்கிய அன்னாபெல் (Annabelle) எனப்படும் சபிக்கப்பட்டதாகக் கூறப்படும் பொம்மையும் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கின்ற செய்தியாக, ரிவேரா இறந்த ஹோட்டல் அறையில் இருந்து அந்த அன்னாபெல் பொம்மை காணாமல் போனது, மேலும் இது குறித்து ஆடம்ஸ் கவுண்டி மரண விசாரணை அதிகாரி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.
ரிவேரா, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர் என்பதுடன், எட் மற்றும் லோரெய்ன் வாரன்கள் நிறுவிய ‘நியூ இங்கிலாந்து சைக்கிக் ரிசர்ச் சோசைட்டி’ உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 1970-ம் ஆண்டு நர்சிங் மாணவியிடம் சென்ற அன்னாபெல் பொம்மை தொடர்ந்து பல அமானுஷ்ய செயல்களுடன் தொடர்புடையதென கூறப்படுகிறது. தற்போது இந்த மரணமும், காணாமல் போன அன்னாபெல் பொம்மையும் இணைந்து, அமெரிக்க முழுவதும் பேய் பரப்புரைகளுக்கு மேலும் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளன.
