
மிக்ஸாம் புயல் காரணமாக வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் டிசம்பர் நான்காம் தேதி இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்தந்த பல்கலை பதிவாளர்கள் அறிவித்துள்ளனர்.