மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது என்றாலும் கூட தமிழகத்தில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் உரசி செல்லும்போது நிச்சயமாக பல இடங்களிலும் கனமழையை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

அதன் காரணமாக நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை பலத்த காற்றோடு இரவு முழுவதும் பெய்து வருகின்றது. இப்பவும் ஆங்காங்கே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை பதிவைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதேபோல பெருங்குடியில் 19 சென்டிமீட்டரும், கோடம்பாக்கத்தில் 18 சென்டிமீட்டர்,  சோழிங்கநல்லூரில் 18 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அடையாளில் 17 சென்டிமீட்டர், புழலில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இப்படி கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் மிக அதி கனமழை பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.