வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள் மெரினா,  திருவல்லிக்கேணி,சேப்பாக்கம்,  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் என பலத்த காற்றோடு மழையானது பெய்து வருகிறது.

குறிப்பாக காற்றினுடைய  வேகத்தை பொருத்தவரைக்கும் மீனம்பாக்கத்தில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அதே போல நுங்கம்பாக்கம் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் காற்றினுடைய வேகமானது பதிவு செய்யப்பட்டிருக்கிறது

வங்கக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல மாவட்டங்களிலும் மழையானது பெய்து வருகிறது.  குறிப்பாக ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் அதி கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உட்பட 5  துறைமுகங்களில் 5  எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  சென்னை, கடலூர், என்னூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.