அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மெனாஷே & சன்ஸ் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை நண்பகலில், முகமூடி அணிந்த நால்வர் சுத்தியலால் கடையின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்து, 90 வினாடிகளில் சுமார் $2 மில்லியன் (ரூ.16.7 கோடி) மதிப்புள்ள வைரங்கள், நகைகள், ஆடம்பரக் கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர். இதில் மட்டும் $7–8 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் கடிகாரங்கள், $1.25 லட்சம் மதிப்புள்ள மரகத நெக்லஸ், பிளாட்டினம் வைரம் போன்றவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைக்குள் நுழைந்த கும்பலில் ஒருவன் ஊழியர்களை நோக்கி கரடி ஸ்ப்ரே மற்றும் டேஸர் காட்டி மிரட்டிய நிலையில், மற்றவர்கள் கண்ணாடி பெட்டிகளை உடைத்து மதிப்புமிக்க பொருட்களை கருப்பு பைகளில் அடைத்து கொண்டு தப்பினர். ஊழியர்களோ, சாட்சிகளோ எந்த காயங்களும் அடையவில்லை.
“இந்த சம்பவம் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது. சில நாட்களுக்கு கடையை மூட வேண்டியிருக்கிறது” என்று கடை துணைத் தலைவர் வருத்தத்துடன் ஜோஷ் மெனாஷே தெரிவித்தார்.
💎Thieves steal $2 million worth of jewelry in Seattle in 90 seconds. pic.twitter.com/HFWEfTqsqh
— News.Az (@news_az) August 16, 2025
“>
இந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. அதில் ஹூடிகள் அணிந்த நால்வரும் வெறும் நிமிட நேரத்தில் காட்சி பெட்டிகளை உடைத்து தப்பிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த நேரத்திற்குள் குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். தற்போது அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், சியாட்டில் காவல் துறை பொதுமக்களிடம் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
