அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சிறப்பு தேவையுடைய சிறுமிகளை கவனிக்கும் பெயரில், பாலியல் வன்கொடுமை குழுவை நடத்திய 31 வயதான பால்மரியாள் பிரிட்னி மே லியான், குறைந்தது நான்கு சிறுமிகளை தனது காதலன் சாமுவேல் கப்ரேராவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது நீதிமன்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிகளில் 3 வயது குழந்தையும், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

விசாரணையில், லியான் தனது பால்மரியாள் சேவையை ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெற்று குழந்தைகளை தனது கவனிப்பில் வைத்துக் கொண்டு பின்னர் கப்ரேராவுடன் சேர்ந்து கொடூர குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கப்ரேராவின் வசம் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், குழந்தைகளை மயக்கி வன்கொடுமை செய்த காட்சிகள், மறைமுகமாக எடுக்கப்பட்ட பதிவுகள் கைப்பற்றப்பட்டன. 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாயிடம் “லியான் உடன் இருக்க விருப்பமில்லை” என கூறியதன் மூலம் இக்குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

“>

 

சான் டியாகோ நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியதில், பிரிட்னி மே லியானுக்கு 100 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பளிக்கப்பட்ட தருணத்தில் லியான் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், அவரது காதலன் கப்ரேராவுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது. குழந்தைகளை குறிவைத்து பல ஆண்டுகளாக திட்டமிட்டு நடந்த இந்த கொடூரம் அமெரிக்க முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.