
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் 2 சிறுமிகள் வசித்து வருகிறார்கள். இந்த சிறுமிகளை கடந்த மாதம் 17ஆம் தேதி ஐபின் (19), அபிலாஷ் (24), பைசல்கான்(28) ஆகிய மூன்று பேர் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
அவர்கள் மூவரும் அந்த சிறுமிகளுக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் போதையில் தள்ளாடிய நிலையில் பின்னர் ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
பின்னர் சிறுமிகளை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடிய நிலையில் மயக்கம் தெளிந்த பிறகு தான் தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தனர். பின்னர் இது தொடர்பாக சிறுமிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.