தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர  ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக பிஇ இரண்டாம் ஆண்டு சேர விண்ணப்பிப்பது வழக்கம்.

அதன்படி இந்த வருடம் பிஏ இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர விருப்பமுள்ள மாணவர்கள் 300 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் tnlea.com, accet.co.in, accetedu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.