உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு பிஞ்சு குழந்தைக்கு நடந்திருக்கும் இந்த கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அக்ரம் என்பவரின் 6 வயது மகள் விளையாடும்போது சாக்கடை அருகே சென்று துணிகளை அழுக்காக்கியுள்ளார். இதைப் பார்த்த அக்ரமும், அவரது இரண்டாவது மனைவி நிஷா பர்வீனும் ஆத்திரத்தில் அந்தக் குழந்தையை மிருகத்தனமாக அடித்துள்ளனர். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை நீல நிறமாக மாறும் வரை அவர்கள் அடித்திருப்பது பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கிறது.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த உண்மையை மறைக்க அந்தக் கொடூர தம்பதி குழந்தையை ரகசியமாகப் புதைக்க முயன்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த மக்கள் சரியான நேரத்தில் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததால், அக்ரமும் நிஷாவும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். ஏற்கனவே அந்த வீட்டில் இருந்த மற்ற குழந்தைகளும் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
