
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, DMKவின் நீட் கையெழுத்து இயக்கம் வழக்கமான டிராமா தான். வேலை இல்லாத ஒரு கட்சி திமுக. கையெழுத்து இயக்கம்னு வேலையில்லாத ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்துக்கிட்டு ரோட்ல கிளம்பி இருக்காங்க… இதுக்கு என்ன கமெண்ட் பண்றது ? பத்து வருஷமா ஆட்சியில் இருந்திருக்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி இருக்கோமா ? 2014இல் இருந்து இப்போது வரை இருக்கோம். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினோமா…. இந்த அரசியலமைப்பு சட்டத்தினால் தான் இன்னைக்கு மோடி அவர்கள் பிரதமர் ஆகியிருக்காங்க.
அதனால் திருமாவளவன் அவர்கள் அந்த கட்டுக்கதையில வீட்டிலேயே வைத்துவிட்டு, உருப்படியா… எம்பியா அவர் என்ன செய்திருக்கிறார் என்று மக்கள் மன்றத்தில் வந்து பேசணும். மோடி அவர்களை திட்டுவதை தன்னுடைய முழு நேர வேலையாக வைத்திருக்கக் கொண்டு… ஒரு எலக்சனுக்கும் ஒருவ்வொரு பொய் சொல்றவங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி என்ன தெரியும் ? நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.
நம்ம கூட்டணி மக்களோட. அது முதல் கூட்டணியா இருந்தால் என்ன? இரண்டாவது கூட்டணியாக இருந்தால் என்ன ? மூன்றாவது கூட்டணியாக இருந்தால் என்ன ? 1stஆ ? 2ndஆ ? 3rdஆ ? மேட்டர் அது இல்லை…. நாங்கள் மக்களோடு இருக்கிறோம்… மக்களோடு எங்களுடைய கூட்டணி… பத்தாண்டு காலமாக வேலை செய்து இருக்கின்றோம்…
மக்கள் மன்றத்திலே என்ன வேலை செஞ்சிருக்கோ, அப்படிங்கற ரெக்கார்டு கொடுக்க வேண்டியது எங்க கடமை. நீங்க கேப்பிங்க பத்து வருஷம் ஆட்சியில் இருந்துருக்கீங்க.அதற்கான பதிலை கொடுத்துட்டு இருக்கோம். அதற்கு தான் தேர்தலை தவிர வேறு எதற்கும் தேர்தலில் இல்லை என தெரிவித்தார்.