சமூக ஊடகங்கள் மற்றும் கூகிள் தேடலில் ’19 நிமிட எம்.எம்.எஸ்.’ (19-Minute MMS) என்ற பெயரில் வீடியோக்கள் பரவிவரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஹரியானா மாநிலக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் பிரபலங்களான சோஃபிக் எஸ்.கே. (Sofik SK) மற்றும் டஸ்டு சோனாலி (Dustu Sonali) ஆகியோரின் அசல் வீடியோ பரவியதாகக் கூறப்பட்டு நீக்கப்பட்ட நிலையில், தற்போது ‘பார்ட் 2’ என்ற பெயரில் புதிய வீடியோக்கள் உலா வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் பல வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், அதிகாரப்பூர்வமற்றவை என்றும் ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
View this post on Instagram
இந்தத் தேடலைப் பயன்படுத்திச் சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றி, போலியான வீடியோ இணைப்புகளைக் கிளிக் செய்யத் தூண்டி, அதன் மூலம் பண இழப்பை ஏற்படுத்துவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது. ஹரியானா காவல்துறையின் சைபர் செல் அதிகாரி அமித் யாதவ், இந்த ‘பார்ட் 2’ வீடியோக்கள் போலியானவை என்றும், அவற்றைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியும் முறைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இதுபோன்ற ஆபாச வீடியோக்களையோ அல்லது போலியான ஏஐ வீடியோக்களையோ சமூக ஊடகங்களில் பகிரவோ, ஃபார்வர்டு செய்யவோ வேண்டாம் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீறுவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) கீழ் பிரிவு 67 உட்படக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் வரைச் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
