நாடு முழுவதும் போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடாமல் இருந்த 73000 நிறுவனங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்தனர். இதில் 18000 நிறுவனங்கள் போலி என்பது தெரியவந்தது. அதோடு அந்நிறுவனங்கள் சுமார் ரூபாய் 24,550 கோடி ஜிஎஸ்டி எழுத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் பிறகு இந்த நடவடிக்கையின் போது ரூபாய் 70 கோடி ஜி எஸ் டி பாக்கி செலுத்தின.

போலியான ஜிஎஸ்டி பதிவை சரிபார்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இரண்டாவது கட்ட நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் 21,791 போலி நிறுவனங்கள், மொத்தம் ரூபாய் 24,010 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்துள்ளது.