தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய 18 வயது மகள் ஜோவிகாவை சினிமாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றார்.

இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன் மகளுக்காக நல்ல கதையை தேடி வருவதாகவும் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை விட என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியம். விரைவில் இவர் சினிமாவில் ஹீரோயினியாக நடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.