பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தன்னுடன் நடனம் ஆட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும், கூச்சப்படும் கணவன் என்ற தலைப்பில்  தன்னுடன் நடனமாட தயங்கும் கணவர்களை  மனைவிகள் விடாமல்  ஆட வைப்பதுடன், அவர்களை பேச முடியாத அளவிற்கு மூச்சிரைக்கவும் செய்துள்ளனர். இதனை பார்த்த  கோபிநாத் சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்துள்ளார். மேலும் அப்பாவியாக நின்ற கணவர்களை பார்க்க மிகவும் பாவமாகவே இருந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.