
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் பதவியே தேவையில்லை என சட்டமன்றத்தில் சொல்லுகிறார். 17 வருடம் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள்… சர்க்காரியா கமிஷன் போட்டு…. எல்லா மாநிலத்திலும் கருத்து கேட்டு, அவர் அறிக்கை கொடுக்கின்றார்… அவர் என்ன சொல்லுகிறார் ? ஆளுநர் எப்படி போடணும் ? அவருக்கு என்னென்ன அதிகாரம் கொடுக்க வேண்டும் ? என்பதை வரைமுறைப்படுத்தி….
அதை அமல்படுத்தினாலே போதும்… இந்த பிரச்சனை எல்லாம் எதிர்காலத்தில் வந்து இருக்காது… அப்போ 17 வருடம் மத்தியில் இருந்து விட்டு, அதை ஏன் நீங்க அமல்படுத்தவில்லை ? அப்படி அமல்படுத்தியிருந்தால் இன்றைக்கு பிரச்சனை இல்லை. இன்னைக்கு ஆளுநருக்கும் – அரசுக்கும் மோதல் போக்கு உருவாக்கி இருக்காது.
எங்களைப் பொருத்தவரை ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் எழுதப்பட்ட விதி. அது அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. திமுகவை பொறுத்தவரை தேவைக்கு ஏற்றார் போல்…. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு…. ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்ற வகையில் கொள்கையை மாற்றிக் கொள்வதில் பச்சோந்தித்தனமான முறைகளை கையாளுவதில் கில்லாடிகள் தான் ஆளும் விடியா திமுக அரசு என தெரிவித்தார்.