சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த கோரா விபத்து அதிகாலை ஒரு மணி அளவில் நடந்த நிலையில், அதன் பிறகு தான் போக்குவரத்து காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட பகுதியில் பனிமூட்டம் நிலவுவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

பனிமூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்தில் அதிக விபத்துக்கள் உண்டாகலாம் எனவும் குறைவான வேகத்துடன், எச்சரிக்கையாக வாகனத்தை ஓட்டுமாறும் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.