ஐபிஎல் 2026 தொடர் நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்த நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்துதான் மிரண்டு போய்க்கிடக்கிறது!

நடப்பு சீசனில் 15 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 776 ரன்களைக் குவித்து, 237.30 என்கிற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டுடன் அதிக ரன்கள் எடுத்த வீரராக மிரட்டியுள்ளார்.

இதன் மூலம் ஆரஞ்சு கேப், மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர் (MVP), வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்ட்ரைக்கர் மற்றும் அதிக சிக்ஸர்கள் என 5 மெகா விருதுகளையும், ₹55 லட்சம் மதிப்புள்ள பரிசுகளையும், ஒரு புத்தம் புதிய டாடா சியரா காரையும் அள்ளி சாதனைப் படைத்துள்ளார்.

போட்டிக்குப் பிறகு மேடையில் முன்னாள் இந்திய கேப்டன் ரவி சாஸ்திரி, “இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்க தினமும் எவ்வளவு பால் குடிப்பே தம்பி?” என ஜாலியாகக் கேட்க, அதற்கு அந்த 15 வயது சிறுவன் முகத்தில் சிரிப்புடன் “நான் இப்போதெல்லாம் பால் குடிக்கிறது இல்ல சார்!” என அனுபவ வீரர் போல கூலாகப் பதிலளிக்க, ஒட்டுமொத்த மைதானமும் சிரிப்பலையில் மூழ்கியது!

“>

 

ஜூன் 9 முதல் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாட இலங்கை பறக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த மாஸ் ஆட்டமும், கிண்டலான பேச்சும் தான் இப்போ சோசியல் மீடியாவின் டாப் ட்ரெண்டிங்!