அகமதாபாத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான ஐபிஎல் 2026  ஃபைனலில், ஆர்சிபி ரன் சேஸிங்கின் 16வது ஓவரில்  ஒரு பயங்கர சர்ச்சை வெடித்தது!

அர்ஷத் கான் வீசிய பந்தை விராட் கோலி மிட்-ஆஃப் திசையில் தூக்கி அடிக்க, அங்கே பாய்ந்து வந்து கேட்ச் பிடித்தார் குஜராத் கேப்டன் ஷுப்மன் கில். ஆனால், பந்து தரையில் பட்டுவிட்டதாகக் கோலி வாதிட, கள நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுக்கப் பார்க்க.. கடுப்பான கோலி மைதானத்திலேயே நடுவருடனும், கில்லுடனும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேட்டர் தேர்ட் அம்பயருக்குப் போக, ரீப்ளேயில் பந்து தரையைத் தொட்டது உறுதியானதும் ‘நாட் அவுட்’ என தீர்ப்பு மாற்றப்பட்டது! அந்த நிமிடம் அனல் பறக்கக் கொண்டாடிய விராட் கோலி, வெறும் 42 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் விளாசி (25 பந்துகளில் அதிவேக அரைசதம்), லாங்-ஆனில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தையே முடித்து வைத்தார்.

“>

 

ரசிக் சலாம் டார் 3 விக்கெட் வீழ்த்தி குஜராத்தை 155 ரன்களுக்குள் சுருட்டிய நிலையில், ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்து, தொடர்ந்து 2-வது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தூக்கி கெத்து காட்டியுள்ளது!

“>