ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிந்தைய இந்த இந்தியப் பயணத்தின் போது, டெல்லியில் நடைபெற்ற 23வது இந்தியா–ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்றார்.
இந்த வருகைக்கிடையில், புதின் இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
பின்னர் இந்திய பயண அனுபவத்தைப் பற்றி பேசிய புதின், இந்தியாவின் மொழிப்பல்வகையை பாராட்டி கூறியதாவது:
சில நாட்களுக்கு முன் இந்தியா சென்றேன். 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை. 50–60 கோடி மக்களைத் தவிர, மற்றவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுகின்றனர். ஒரே மொழி பேசும் மக்களுக்கு, மற்றொரு மொழி பேசும் மக்களைப் பற்றி அறிவு இல்லாத நிலையும் உள்ளது. ஆயினும், இந்தப் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் பாதுகாப்பது மிக முக்கியமானது என்றார்.
மேலும் புதின் கூறிய இந்தக் கருத்துகள், இந்தியாவின் பன்மொழி பாரம்பரியத்தை உலகரங்கில் மீண்டும் வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.
