மும்பையைச் சேர்ந்த ஆஞ்சல் ராவத் என்ற பெண், தனது கணவருடன் பள்ளி நாட்களில் இருந்த அனுபவம் மற்றும் காதல் கதையை “X”- தளத்தில் பகிர்ந்துள்ளார். “அவன் என்னை பள்ளியில் வெறுத்தான்” என தொடங்கும் இந்த பதிவு தற்போது லட்சக்கணக்கான நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்து வைரலாகி வருகிறது.
அவள் கூறுவதில், பள்ளிக்காலத்தில் ஆண்களிடம் பேசாமல் இருப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. ஒருநாள் ஒரு வகுப்புத் தோழன் அவளுக்கு தனது ‘போகிமான் டிபன் பாக்ஸை’ அளிக்க முயன்றபோது, தவறுதலாக அவள் அதை கீழே போட்டு உடைத்துவிட்டாள். இதனால் அந்த மாணவன் பாதிக்கப்பட்டு மீண்டும் ஒருபோதும் அவளிடம் பேசவில்லை எனவும், அதே காரணமாக அவர்களது நட்பு தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது எனவும் கூறுகிறார்.

ஆனால் 15 ஆண்டுகள் கழித்து, திருமண செயலி மூலம் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது அந்த மாணவன் அனுப்பிய முதல் மெசேஜ் – “நீ எனக்கு ஒரு புதிய டிபன் பாக்ஸ் வாங்கித் தருவாயா?” என்ற நகைச்சுவையான கேள்வி. இதுவே அவர்களின் உறவிற்கு புதிய தொடக்கமாக மாறி, தற்போது இருவரும் திருமணமாகி குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
I MARRIED THE GUY WHO HATED ME IN SCHOOL
I was the kind of girl who didn’t want to be friends with boys. A nerdy shy guy tried to share his lunch with me and i accidentally broke his pokemon tiffin box lol.. I think I almost made him cry that day and he never spoke to me… pic.twitter.com/6zKlV9Num7
— Aanchal Rawat (@AanchalRaw3702) August 2, 2025
“>
“பள்ளியில் நட்பு இல்லை. ஆனால் இப்போது வாழ்க்கை முழுக்க நண்பனாகவே இருக்கிறான். நட்புத் தின வாழ்த்துகள், கணவரே!” என தனது பதிவை முடித்துள்ளார் ஆஞ்சல். இந்த பதிவு உணர்ச்சிபூர்வமாகவும் நகைச்சுவையோடும் நெஞ்சை வருடும் வகையிலும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
