விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய வீட்டில் டியூஷன் எடுப்பது வழக்கம். அப்போது அவரிடம் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனும் படிக்க சென்றுள்ளான்.

அப்போது மாணவனுக்கும் பவித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் காதலாக மாறியது. அதன் பிறகு அடிக்கடி மாணவனுடன் அவர் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஒரு நாள் மாணவனுடன் பவித்ரா வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் அந்த மாணவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பவித்ராவை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது அவர் சிக்கிய நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த மாணவனுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.