இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ட்ரூகாலர் போன்ற செயலிகளில் இனிமேல் 140 மற்றும் 1600 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ‘ஸ்பேம்’ எச்சரிக்கை காட்டப்படாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது ஒட்டுமொத்த மொபைல் பயனர்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாகமாறியுள்ளது.
இந்த விசித்திர எண்களின் பின்னணி குறித்துப் பேசிய ட்ராய் அமைப்பு, 1600 என்று தொடங்கும் எண்கள் அனைத்தும் மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் ஆர்பிஐ , செபி போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பரிவர்த்தனை எச்சரிக்கைகள், ஓடிபி போன்ற முக்கியமான தகவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், இவற்றை எந்தவொரு செயலியும் முடக்கவோ அல்லது ஸ்பேம் எனத் தவறாகக் காட்டவோ கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அதே சமயம், 140 என்ற தொடக்க எண் பதிவுசெய்யப்பட்ட விளம்பரதாரர்களுக்கானது என்றும், இதிலிருந்து வரும் விளம்பர அழைப்புகளைத் தடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ட்ராயின் அதிகாரப்பூர்வ டிஎன்டி செயலியைப் பயன்படுத்தித் தங்களது விருப்பங்களைப் பதிவு செய்து தடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரூகாலர் நிறுவனத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கூடுதல் அதிகாரங்களைக் கேட்டு ட்ராய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
