பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெக்ரிக்–இ–இன்சாப் (PTI) கட்சியின் தலைவரான இம்ரான் கான் (73), கடந்த 845 நாட்களாக அடியாலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஊழல் முதல் பயங்கரவாதம் தொடர்பான பல வழக்குகளிலான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் ராவல்பிண்டி அடிலா சிறையில் தனிமைச் சிறை பிரிவில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் முயற்சித்தபோதும், சிறைத்துறை அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து, அடியாலா சிறை முன் குடும்பத்தினரும் PTI உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“எனது தந்தை உயிருடன் உள்ளாரா? உடனடி ஆதாரம் அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை, இம்ரான் கானின் மகன் காசிம் கான், சமூக ஊடக தளம் ‘எக்ஸ்’–ல் பதிவிட்டுள்ளார். “என் தந்தை 845 நாட்களாக சிறையில் உள்ளார். அவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம் வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தச் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.