உலகில் சில நாடுகள் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை வறுத்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில், தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற ஓர் இந்தியர், அங்குள்ள தெருவோரக் கடையில் விற்கப்பட்ட வறுக்கப்பட்ட கான்செந்தீனியை (பூரான்) சாப்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இந்தியப் பயனர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அந்த இந்தியச் சுற்றுலாப் பயணி, ஒரு தெருவோரக் கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூச்சி வகைப் பண்டங்களைப் பார்க்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sagar Sankpal (@sagar_sankpal93)

அவற்றில் இருந்து, குச்சியில் சொருகப்பட்டிருந்த கான்செந்தீனியை எடுத்து, கடைக்காரப் பெண்ணிடம் “சாப்பிடலாமா?” என்று கேட்கிறார். அந்தப் பெண் “வேண்டாம்” என்று மறுத்தாலும், அந்த நபர் அதை ஒரு சாதாரண இந்திய சிற்றுண்டியைப் போலச் சப்புக் கொட்டிச் சாப்பிடுகிறார்.

சாப்பிட்ட பின், அது ‘மிகவும் சுவையாக’ இருந்ததாக அவர் கூறும்போது, அதை விற்பனை செய்த பெண்ணே முகத்தைச் சுளித்து நாக்கைத் துருத்துகிறார்.

இந்தச் செயலால் ஆத்திரமடைந்த பல இந்தியப் பயனர்கள், “இவரை இந்தியாவை விட்டு விலக்குங்கள்”, “நீங்கள் இனி இந்தியாவுக்குத் திரும்பி வரவேண்டாம்” என்றும், “இவன் சைனீஸ்காரனை விடவும் மோசமாக இருக்கிறான்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.