ரயில் பயணம் ஒன்றின் போது பயணி ஒருவர் குடிநீருக்காக ரூ.14 விலை கொண்ட ‘ரயில் நீர்’ பாட்டிலை கேட்டபோது, அதற்கு விற்பனையாளர் ரூ.20 கட்டணம் வசூலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரூ.80 மதிப்புள்ள உணவை வாங்கியபோது அவரிடம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ரசீது கேட்டபோது, எந்தவொரு பில்லும் வழங்க முடியாது என்று விற்பனையாளர் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பயணி அதைக் கேள்வி கேட்டதற்கு, “நான்தான் இங்க பாஸ், உன்னால் முடிந்ததைச் செய்துகொள்” என்று அந்த விற்பனையாளர் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
உடனே உஷாரான பயணி, “139 என்ற எண்ணில் புகார் அளிப்பேன், நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார். அதற்கு அந்த விற்பனையாளர், “நான் எல்லோரையும் கவனித்துக் கொள்கிறேன், அவ்வளவு எளிதாக நான் சிறைக்குச் சென்றுவிடுவேன் என்று நினைக்கிறீர்களா?!” என்று திமிராகப் பேசிய சம்பவம் சக பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
एक व्यक्ति ट्रेन में सफर कर रहा था
रास्ते में उसने पानी लेने के लिए ₹14 वाली रेल नीर की बोतल मांगी, लेकिन वेंडर ने उससे ₹20 लिए
इसके बाद उसने ₹80 वाला खाना मांगा तो उससे ₹100 मांगे गए
जब यात्री ने बिल मांगा तो वेंडर ने कहा कि बिल नहीं बनेगा
यात्री ने जब इसका विरोध किया तो… pic.twitter.com/Qd0bbVt7rD
— Ayesha Majid Khan (@Ayesha786Majid) August 24, 2026
“>
ரயில் பயணிகளின் மீது இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
