
செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா ? அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க… சட்டம் ஒழுங்கு சரியில்ல. பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்.. காலையில் திறந்தாங்கன்னா…. 24 மணி நேரமும் போய்கிட்டு இருக்கு. அதுவும் லைசென்ஸ் இல்லாத பார்வைகள் நிறைய நடக்குது. இதெல்லாம் நீங்க பத்திரிகைக்காரர்கள் தான் வெளியில கொண்டு வரணும். என்னன்னு தெரியல… திமுக அரசாங்கத்தை பத்தி பேசுறதுக்கு, பத்திரிகையாளர்களே பயப்படுறாங்க, அதுதான் நடக்குது இப்போ…
நம்ம ஏன் சொல்லுவானு… நம்ம டிவில வந்துட்டா நாளைக்கு எதுவும் ஆகுமோ, அப்படிங்கிற மாதிரி நினைச்சுட்டு இருக்கீங்க.. விலைவாசி உயர்வு வருவதற்கு… தக்காளி – வெங்காயம் மெயின். வீட்டு சமையலுக்கு லேடிஸ்_க்கு வேணும். அது இல்ல. நீங்க விவசாயத்துக்கு என தனி பட்ஜெட்என சொன்னீங்க… விவசாய சம்பந்தமான முடிவுகளை சரியாக எடுக்கணும் அல்லவா… நம்ம தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தேவைப்படும் ? அப்படிங்கிறதை பார்த்து அதற்கு முன்னேற்பாடா நீங்கள் செய்தீர்கள் என்றால் ? நம்ம தமிழ்நாட்டிலேயே விளைவிக்கலாம். நம்ம தமிழ்நாட்டிலேயே மக்களுக்கு கொடுக்கலாம். அந்த விஷயம் உங்களுக்கு தெரியல..
என்னை பொருத்தவரைக்கும் மத்தவங்க வேணும்னா சொல்லலாம். நான் எதையும் முடிகிற வரைக்கும் விட மாட்டேன். காவேரி தண்ணி பிரச்சனை. கிட்டத்தட்ட ஜூன் மாதம், ஜூலை மாதத்திற்கும் 40 டிஎம்சி தண்ணீர் வரணும். 3 டிஎம்சி தான் கொடுத்து இருக்காங்க. இன்னைக்கு திறந்து விட்டு இருக்கேன்னு சொல்றாங்க. அதுவரைக்கும் பயிர் காத்துகிட்டு இருக்குமா ? தண்ணி வர்ற வரைக்கும்… பயிர் வெயிட் பண்ணுமா ? நீங்க பன்னிரண்டாம் தேதி போய் தண்ணியை திறந்து விட்டீங்க… மேட்டூர்ல எவ்வளவு தண்ணி இருக்கு ? அப்படின்னு கூட தெரிஞ்சுக்காம… நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு இருக்கீங்க… உங்களுக்கு வேண்டியது ஒரு போட்டோ, ஒரு நியூஸ், ஒரு பப்ளிசிட்டி அத வச்சு கொடுத்து, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?
டெல்டா மாவட்ட விவசாயிகளெல்லாம் உங்கள பாத்து தண்ணி இனிமே வந்துரும். அப்படின்னு நினைச்சுகிட்டு, அவங்க எல்லாரும் பயிரை போட்டுட்டாங்க. இப்ப எல்லாம் முளைத்து, எல்லாம் செடி கருகி போகின்ற நிலைமைக்கு வந்துடுச்சு. இன்னும் 12 நாள், 13 நாளைக்கு தான் மேட்டூர்ல தண்ணி இருக்கு. அப்ப அந்த அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ஏக்கர் என்ன நிலைமை ஆகும் ? – என தெரிவித்தார்.