தமிழகத்தில் ஆபாச தளங்களை பயன்படுத்துவோர் இணையதளத்தில் தங்களின் மொபைல் எண்களை பதிவிடவோ அல்லது அதிலிருந்து எண்களை தொடர்பு கொள்ளவும் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக மோசடி கும்பல் பல வகையான யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. அதில் பெரும்பாலான புகார்களுக்கு காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தீர்வு காணப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆபாச தளங்களில் நடைபெறும் மோசடிகள் தொடர்பாக புகார் தெரிவிக்க சபல நபர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆபாச கதைகள் மற்றும் வீடியோக்களின் கமெண்டில் ஏராளமான எண்கள் உள்ளது.

பலரும் தங்களின் மொபைல் எண்ணை பதிவிட்டு பெண்கள் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடுகிறார்கள். இந்த எண்களை சபல நபர்கள் தொடர்பு கொள்ளும் போது அழைப்பை எடுக்காமல் சிறிது நேரம் கழித்து குறுஞ்செய்தியில் பதில் அளிக்கின்றனர். அதாவது வீடியோ கால் செய்து சபல நபரின் முகத்தை மட்டும் ரெக்கார்டு செய்து அவரின் முக அமைப்புக்கு ஏற்ப ஆடை இல்லாதது போல வேறு பெண்ணுடன் இருப்பது போல மார்ஃபிங் செய்து பணம் பறிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஆபாச தளங்களை பயன்படுத்துவோர் அந்த தளத்தில் தங்களின் மொபைல் எண்களை பதிவிடுதல் அல்லது அதிலிருந்து எங்களை தொடர்பு கொள்ளுதல் வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.