மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக அவர்களின் படிப்புக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து தற்போது வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நடப்பாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி வழங்கவும் இதற்காக 14 புள்ளி 90 கோடி ரூபாய் ஒதுக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட உதவித்தொகை:

1 – 5ம் வகுப்பு – 1,000 – 2,000

6 – 8 ம் வகுப்பு – 3,000 – 6,000

9 – 12ம் வகுப்பு – 4,000 – 8,000

பட்டப்படிப்பு – 6,000 – 12,000

தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம் – 7,000 – 14,000