தமிழகத்தில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநில ரேஷன் அட்டைதாரர்களும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை பயன்படுத்தி உணவு தானியங்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் தமிழக ரேஷன் கடைகளில் பிற மாநில ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் தமிழக அரசு தொடங்க இருப்பதால் அதற்காக ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு விரல் ரேகை கருவியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக ரேஷன் அட்டைதாரர்களும் முகவரிக்கு ஒதுக்கிய கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.