விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர்போன அடல்ட் மூவி ஸ்டார் லில்லி பிலிப்ஸ், தற்போது தனது பழைய வாழ்க்கைப் பாதையை விடுத்து ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 மணி நேரத்தில் சுமார் 1,113 ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படைக்கப்போவதாக அறிவித்து உலகையே அதிரவைத்தவர் இவர்.

இவருடைய இந்த வினோத முயற்சி சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களுக்கு உள்ளான நிலையில், தற்போது அவர் மதம் மாறி ஞானஸ்நானம் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லில்லி பிலிப்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் ஞானஸ்நானம் பெறும் வீடியோவை பகிர்ந்து, “ஹோப் கிறிஸ்டியன் கம்யூனிட்டி என்னை அன்புடன் வரவேற்றது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Lily Phillips (@lilyphillip_s)

“>

மேலும் “இயேசு கிறிஸ்து எனது வாழ்க்கையை மாற்றிவிட்டார், இனி நான் ஒரு புதிய மனிதன்” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த திடீர் மாற்றத்தை சிலர் பாராட்டினாலும், பலர் இது வெறும் விளம்பர யுக்தி என்று விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், தனது கடந்த கால கசப்பான பக்கங்களை மூடிவிட்டு, கடவுளின் வழியில் ஒரு அமைதியான வாழ்க்கையைத் தொடங்கப்போவதாக லில்லி உறுதியளித்துள்ளார்.